ஹரியானா சட்டசபை தேர்தல் காங்., பார்வையாளர் நியமனம்
ஹரியானா சட்டசபை தேர்தல் காங்., பார்வையாளர் நியமனம்
ADDED : செப் 14, 2024 08:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:ஹரியானா சட்டசபைத் தேர்தல் பார்வையாளர்களாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அசோக் கெலாட், அஜய் மக்கான் மற்றும் பர்தாப் சிங் பஜ்வா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஹரியானா மாநில சட்டசபைத் தேர்தல் அக்டோபர் 5ம் தேதி நடக்கிறது. மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் 89 வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்துள்ளது. பிவானி தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு செய்துள்ளது.
ஹரியானா தேர்தலுக்கான மேலிடப் பார்வையாளர்களாக கட்சியின் மூத்த தலைவர்களான அசோக் கெலாட், அஜய் மக்கான் மற்றும் பர்தாப் சிங் பாஜ்வா ஆகியோரை, அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நியமித்துள்ளார்.