ஹரியானா பா.ஜ., வேட்பாளர் பட்டியல் ரிலீஸ்: அமைச்சர் உட்பட 9 பேருக்கு கல்தா!
ஹரியானா பா.ஜ., வேட்பாளர் பட்டியல் ரிலீஸ்: அமைச்சர் உட்பட 9 பேருக்கு கல்தா!
UPDATED : செப் 05, 2024 09:32 AM
ADDED : செப் 05, 2024 12:40 AM

சண்டிகர்: ஹரியானா சட்டசபை தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ., நேற்று வெளியிட்டது.
ஹரியானா சட்ட சபைக்கு அடுத்த மாதம் 5ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான வேட்பாளர் பட்டியலை பா.ஜ. தலைமையகம் நேற்று வெளியிட்டது. மொத்தம் 90 தொகுதிகள் உள்ள நிலையில், முதற்கட்டமாக 67 பேர் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முதல்வர் நயாப் சிங் சைனி, லாட்வா தொகுதியில் போட்டியிடுகிறார்.
சமீபத்தில் பா.ஜ.,வில் சேர்ந்த ஷக்தி ராணி சர்மாவுக்கு கால்கா தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.இவர், அம்பாலாவின் மேயராக உள்ளார். முன்னாள் அமைச்சர் அனில் விஜ் அம்பாலா கன்டோன்மென்ட் தொகுதியில் போட்டியிடுகிறார்.
தீபக் மங்ளா, நரேந்திர குப்தா, விஷம்பார் மாலிக், அமைச்சர் ரஞ்சித் சவுதாலா, சித்தராம் யாதவ், முன்னாள் அமைச்சர் சந்தீப் சிங், சஞ்சய் சிங், லட்சுமணன் நாபா ஆகியோருக்கு மீண்டும் போட்டியிட இடம் கொடுக்கப்படவில்லை. இதனால் ஏற்கனவே எம்.எல்.ஏ.,க்களாக உள்ள ஒன்பது பேருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.