ஹரியானா ஜூலானவா தொகுதியில் மல்லுகட்டும் மல்யுத்த வீராங்கனைகள்
ஹரியானா ஜூலானவா தொகுதியில் மல்லுகட்டும் மல்யுத்த வீராங்கனைகள்
ADDED : செப் 12, 2024 02:15 AM

குர்கான் : ஹரியானா சட்டசபை தேர்தலில் ஜிந்த் மாவட்டம் ஜூலானா தொகுதியில் இரு மல்யுத்த வீராங்கனைகள் தேர்தல் களத்தில் மோதுகின்றனர்.
90 இடங்கள் கொண்ட ஹரியானா சட்டசபைக்கு அக். 05ம் தேதி தேர்தல் நடக்கிறது. அக்.08-ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.
இம்மாநிலத்தில் ஜிந்த் மாவட்டம் ஜூலானா தொகுதி இரு மல்யுத்த வீராங்கனைகள் மோதும் மல்யுத்த களமாக மாறியுள்ளது. இம்மாநிலத்தைச் சேர்ந்த ஒலிம்பிக் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், சமீபத்தில் காங்.கட்சியில் ஐக்கியமானார். பிரான்ஸ் ஒலிம்பிக்கில் உடல் எடை கூடியதால் பதக்க வாய்ப்பை இழந்தார்.
தேர்தலில் போட்டியிட வாய்ப்பாக ஜூலானா தொகுதி காங்., வேட்பாளராக களம் இறங்கியுள்ளார். இவரை எதிர்த்து தொழில்முறை மல்யுத்த வீராங்கனையான கவிதா தலால் என்பவர் ஆம் ஆத்மி கட்சி சார்பில் களம் இறங்கியுள்ளார்.
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த இரு மல்யுத்த வீராங்கனைகளுக்கிடையே பா.ஜ.,சார்பில் யோகேஷ் பைராகி என்ற முன்னாள் விமான பைலட் போட்டியிடுகிறார். இதனால் ஜூலானா தொகுதி தேர்தல் களமாக அல்லாமல் மல்யுத்தகளமாக மாறியுள்ளது.
****************