ADDED : மார் 29, 2024 09:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிம்லா:ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த இருவர் ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடன் இருந்து 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 96 கிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சிம்லா அருகே பாகு என்ற இடத்தில் சிலர் ஹெராயின் கடத்துவதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. .
குப்ரியில் இருந்து தியோக் நோக்கி சென்ற வாகனத்தை சோதனையிட்டதில் அதில், 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 96 கிராம் ஹெராயின் இருந்தது.
அதைப் பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்தனர், இருவரும் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் குமார், 32, அனில் குமார்,41, என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

