
பீஹார் முதல்வர் நிதிஷ் குமாருடன் பா.ஜ.,வின் உறவு சுமுகமாக உள்ளது. 1996 முதல் பீஹாரில் தேசிய ஜனநாயக கூட்டணியை அவர் வழி நடத்துகிறார். அதனால் நேற்றும், இன்றும், நாளையும் அவரே தலைவர். வரும் தேர்தலிலும் அவரை முதல்வர் வேட்பாளராக பா.ஜ., ஆதரிக்கும்.
சாம்ராட் சவுத்ரி, பீஹார் துணை முதல்வர், பா.ஜ.,
சுயநினைவு இல்லை!
முதல்வர் நிதிஷ் குமார் சுயநினைவுடன் இல்லை. தான் கவனிக்கும் துறைகளின் பெயர்களையே கூற முடியாத நிலையில் உள்ளார். இது தான் உண்மை. இந்த அரசு இருக்கும் வரை, மக்களுக்கு எந்த உரிமைகளும் கிடைக்காது. சுயநினைவு இல்லாத ஒருவர் மீது, நீங்கள் என்ன நம்பிக்கை வைக்க முடியும். ஆட்சியை மாற்றுவது தான் இதற்கு ஒரே தீர்வு.
தேஜஸ்வி யாதவ், தலைவர்,ராஷ்ட்ரீய ஜனதா தளம்
ஊடகங்கள் சரியில்லை!
பல நுாற்றாண்டுகளுக்கு முன் செத்து புதைந்த அவுரங்கசீப்பை பற்றி ஊடகங்கள் விவாதங்களை நடத்துகின்றன. ஆனால், இன்று நாடு சந்தித்து வரும் பொருளாதார நெருக்கடி, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஆகியவை பற்றி கவனம் செலுத்த மறுக்கின்றன.
பிரியங்க் கார்கே, கர்நாடக அமைச்சர், காங்கிரஸ்