வழுக்கி விழுந்ததில் தலையில் காயம்: சுயநினைவை இழந்தார் முகுல்ராய்
வழுக்கி விழுந்ததில் தலையில் காயம்: சுயநினைவை இழந்தார் முகுல்ராய்
ADDED : ஜூலை 07, 2024 01:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோல்கட்டா: தன் வீட்டு குளியல் அறையில் வழுக்கி விழுந்ததில் மேற்குவங்க ஆளும் திரிணமுல் காங்., மூத்த தலைவர் முகுல்ராய், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிருக்கு போராடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 4-ம் தேதி தன் வீட்டு குளியல் அறையில் வழுக்கிவிழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மிகவும் ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் சிகிச்சை அளித்து கண்காணித்து வந்த போதிலும், நேற்று சுயநினைவை இழந்துவிட்டதாகவும், அபாய கட்டத்தில் இருப்பதாக முகுல்ராயி்ன் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.