ADDED : மே 04, 2024 11:42 PM
ஆக்ரா: உத்தர பிரதேசத்தில், பள்ளிக்கு தாமதமாக வந்ததாகக் கூறி, ஆசிரியை ஒருவரை தலைமை ஆசிரியை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உ.பி.,யின் ஆக்ரா மாவட்டத்தின் சீக்னா என்ற பகுதியில் உள்ள துவக்கப் பள்ளி ஒன்றில், குன்ஜன் சவுத்ரி என்பவர் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
சமீபத்தில் இவர் பள்ளிக்கு தாமதமாக வந்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து ஆசிரியை குன்ஜன் சவுத்ரியிடம் பள்ளியின் தலைமை ஆசிரியை கேட்டார்.
அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதை அடுத்து கைகலப்பு ஏற்பட்டது.
ஆசிரியை குன்ஜன் சவுத்ரி - தலைமை ஆசிரியை ஆகியோர், பரஸ்பரம் திட்டிக் கொண்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.
இந்த சம்பவத்தின் போது உடனிருந்த தலைமை ஆசிரியையின் டிரைவர், இருவரையும் சமாதானப்படுத்தினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.