பலத்த போலீஸ் பாதுகாப்பு எம்.பி.க்களாக பதவியேற்ற சுயேட்சைகள்
பலத்த போலீஸ் பாதுகாப்பு எம்.பி.க்களாக பதவியேற்ற சுயேட்சைகள்
ADDED : ஜூலை 05, 2024 07:02 PM

புதுடில்லி: சிறையில் இருந்தே சுயேட்சையாக வெற்றி பெற்ற இரு எம்.பி.க்கள் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பரோலில் வந்து பதவியேற்றுக்கொண்டனர்.
பஞ்சாப்பில் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர் அம்ரித்பால்சிங் 'பஞ்சாப் வாரியர்ஸ்' என்ற அமைப்பை வைத்துக்கொண்டு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக 2023-ம் ஆண்டு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அசாம் மாநிலம் திப்ருகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இவர் பஞ்சாப் மாநிலம் கஹாதூர் ஷாஹிப் லோக்சபா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அதே போன்று காஷ்மீர் மாநிலத்தின் பாரமுல்லா எம்.பி., தொகுதியில் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்ற பயங்கரவாதி ஷேக் அப்துல்லா ரஷீத். இவர் பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டியதாக 2019-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இவர்களில் அப்துல் ரஷீத்திற்கு இரு மணி நேரமும், அம்ரித்பால் சிங்கிற்கு 4 நாள்கள் பரோல் கிடைத்த நிலையில் இவரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பார்லிமென்ட் கொண்டு வரப்பட்டு. இன்று எம்.பி.க்களாக பதவியேற்றனர். முன்னதாக பாராளுமன்ற வளாகத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.