ADDED : ஆக 13, 2024 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜெய்ப்பூர், ராஜஸ்தானில் நேற்று முன்தினம் முதல் தொடர் கனமழை பெய்தது. இதன் காரணமாக, பல்வேறு மாவட்டங்களிலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. ஜெய்ப்பூர், பாரத்பூர், கரவுலி, தவுசா, சவாய் மாதோபூர், கோட்டா உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர் மழை பெய்தது.
இதன் காரணமாக, பள்ளிகளுக்கு, மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது.
கடந்த 24 மணி நேரத்தில் ஜெய்ப்பூரில் 11.8 செ.மீ., மழை பதிவானதாகவும், அடுத்த நான்கு நாட்களுக்கு தொடர்ந்து மழை நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தொடர் கனமழைக்கு, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 19 பேர் பலியாகி உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.