ADDED : மார் 07, 2025 10:30 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:வடக்கு டில்லியின் சமய்பூர் பட்லியில், ஹெராயின் தயாரிக்கும் தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டு, ஒருவர் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து, டில்லி மாநகரப் போலீசின் புறநகர் வடக்கு மண்டல துணைக் கமிஷனர் நிதின் வல்சன் கூறியதாவது:
போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கடந்த 3ம் தேதி, சமய்பூர் பட்லியில் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு, மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் ஹெராயின் தயாரிப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ஆலையை நடத்திய நதீம் கான் கைது செய்யப்பட்டார். அந்த ஆலையில் இருந்து 508 கிராம் ஹெராயின், 4 கிலோ சோடியம், 5 கிலோ அசிட்டிக் அன்ஹைட்ரைட் மற்றும் இதர பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரிடம் தீவிர விசாரணை நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.