ADDED : மார் 07, 2025 11:13 PM
மீனவர்களின் பொருளாதார வளர்ச்சிக்காக, மீன் வள கொள்கை வகுக்கப்படும்
மங்களூரில் உள்ள மீன் வள கல்லுாரியில் மாணவர்கள் எண்ணிக்கை இரட்டிப்பாக அதிகரிக்கப்படும்
கடலோர மாவட்டங்களில், மீன்பிடி தொழிலுக்கு அனுகூலமாகும் வகையில், நபார்டு ஒருங்கிணைப்பில் சாலைகள் மேம்படுத்த 30 கோடி ரூபாய் ஒதுக்கீடு
எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு மீன் வியாபாரிகள், நான்கு சக்கர வாகனங்கள் வாங்க 50 சதவீதம் அல்லது அதிகபட்சம் 3 லட்சம் ரூபாய் வரை நிதியுதவி வழங்கப்படும்
மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட மோட்டார் படகுகளில், 15 ஆண்டுகள் தாண்டிய பழைய இன்ஜின்களை மாற்றி, புதிய இன்ஜின் வாங்க 1 லட்சம் ரூபாய் வரை நிதியுதவி வழங்கப்படும்
சுற்றுலா பயணியருக்கு சுவையான, ஊட்டச்சத்தான மீன் உணவுகள் வழங்க, மைசூரில் ஹைடெக் மீன் உணவகங்கள் அமைக்கப்படும்
மீன்பிடி துறைமுகத்தில், வாகன நெருக்கடிக்கு தீர்வு காண, அரசு, தனியார் ஒருங்கிணைப்பில் 'மல்ட்டி லெவல் பார்க்கிங்' வசதி
ஆழ்கடலில் மீன் பிடிப்பதை ஊக்கப்படுத்த, தற்போது உள்ள மின்பிடி படகுகளின் நீளம் தொடர்பான கட்டுப்பாட்டை தளர்த்த நடவடிக்கை.