ADDED : செப் 14, 2024 09:30 PM

புதுடில்லி : ''எந்த ஒரு மொழிக்கும் ஹிந்தி போட்டி அல்ல. அனைத்து மொழிகளும் நட்புடனும், ஒன்றுக்கு ஒன்றுக்கு ஆதரவாகவும் உள்ளன,'' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறிப்பிட்டார்.
அலுவல் மொழியாக ஹிந்தி சேர்க்கப்பட்டதன், 75வது ஆண்டையொட்டி டில்லியில் நடந்த ஹிந்தி தின விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:
ஹிந்தி என்பது குறிப்பிட்ட நிலப்பகுதியைச் சார்ந்ததாக அல்லாமல், கலாசார அடிப்படையில் நாடு முழுதும் பரவியுள்ளது.
ஹிந்தி தினத்தின் வாயிலாக, அதை ஒரு தகவல் பரிமாற்ற மொழியாக, ஒரு பொது மொழியாக, ஒரு தொழில்நுட்ப மொழியாக மாற்ற உறுதியேற்றோம். தற்போது, சர்வதேச மொழியாக மாற்ற உறுதியேற்போம்.
ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், குஜராத்தி என, எந்த ஒரு மொழியாக இருந்தாலும், மக்களிடையே சிறப்பான தகவல் பரிமாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடனேயே நம் அரசியல்
நிர்ணய சபைக்கான அலுவல் மொழிகள் உருவாக்கப்பட்டன. ''எந்த ஒரு மொழிக்கும் ஹிந்தி போட்டி அல்ல. அனைத்து மொழிகளும் நட்புடனும், ஒன்றுக்கு ஒன்றுக்கு ஆதரவாகவும் உள்ளன,இதன்படி, ஹிந்தி அலுவல் மொழியாக ஏற்கப்பட்டதன், 75வது ஆண்டைக் கொண்டாடுகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

