ADDED : ஏப் 13, 2024 05:45 AM

பெலகாவி: ''நாட்டை காப்பாற்றுவது முக்கியம். நாட்டுக்கு அபாயம் ஏற்பட்டால், ஹிந்துக்களின் நிலமும் இருக்காது; வீடும் இருக்காது,'' என, விஜயபுரா பா.ஜ., - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் தெரிவித்தார்.
பெலகாவி, அதானியில் நேற்று அவர் கூறியதாவது:
அடுத்த சட்டசபை தேர்தலில் கர்நாடகாவில், பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், நானே முதல்வராவேன். தற்போதைய லோக்சபா தேர்தலில் ஜாதி, ஜாதி என பார்க்காமல், நாட்டின் நலனை மனதில் கொண்டு வாக்காளர்கள் ஓட்டுப் போட வேண்டும்.
யார் காலிலும் விழுந்து நமஸ்காரம் செய்யாதீர்கள்; தன்மானத்துடன் இருங்கள். பிரதமர் நரேந்திர மோடி, யாரையும் தன் காலில் விழுந்து நமஸ்கரிக்க சம்மதிப்பது இல்லை. அப்படி இருக்கும்போது, மற்றவர்களின் காலில் ஏன் விழுகிறீர்கள்?
நாட்டை காப்பாற்றுவது முக்கியம். நாட்டுக்கு அபாயம் ஏற்பட்டால், ஹிந்துக்களின் நிலமும் இருக்காது; வீடும் இருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
