ADDED : ஆக 06, 2024 01:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போபால், மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் மகாகாலேஷ்வர் கோவிலில், ஒரே நேரத்தில் 1,500 பேர் உடுக்கை அடித்து, புதிய கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டது.
மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனில் அமைந்துள்ளது, 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான மகாகாலேஷ்வர் கோவில். இந்த கோவிலின் நிர்வாகக் குழு மற்றும் மாநில அரசின் கலாசாரத் துறை இணைந்து, ஒரே நேரத்தில் அதிகமானோர் உடுக்கை அடிக்கும் நிகழ்ச்சிக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில், 1,500 பேர் பங்கேற்று, உடுக்கை அடித்தனர். இது, கின்னஸ் உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டு, அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதற்கு முன், அமெரிக்காவின் நியூயார்க் நகரில், 2022 ஆகஸ்டில், 488 பேர் ஒரே நேரத்தில் உடுக்கை அடித்ததே, இதுவரை சாதனையாக இருந்தது.