ADDED : மே 01, 2024 02:15 AM
பெங்களூரு, பெங்களூரில், 8 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வீட்டு உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ஒரு வீட்டுக்கு ஒரு மாதத்துக்கு முன், தங்களின் 8 வயது மகளுடன் ஒரு தம்பதி வாடகைக்கு குடி வந்தனர். கணவனும், மனைவியும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர்.
பணிக்கு செல்லும்போது, மகளை வீட்டில் தனியே விட்டு செல்வது வழக்கம். நேற்று முன்தினமும், தம்பதி பணிக்கு சென்றிருந்தனர். சிறுமி மட்டும் தனியாக இருந்தாள். இதை நோட்டம் விட்ட அந்த வீட்டின் உரிமையாளர் ஹரிஷ், 35, வீட்டுக்குள் நுழைந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.
பெற்றோர் வீட்டுக்கு திரும்பி வந்ததும், தனக்கு நேர்ந்த கொடுமையை சிறுமி கூறினார். அதிர்ச்சி அடைந்த தம்பதி, மகளை பொது மருத்துவமனையில் சேர்த்தனர். போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார், ஹரிஷை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.