ADDED : மே 30, 2024 07:36 PM
விவேக் விஹார்:பேபி கேர் நியூ பார்ன் சைல்டு மருத்துவமனையின் உரிமையாளர், பணியில் இருந்த டாக்டர் ஆகிய இருவரும் நீதிமன்றக் காவலில் நேற்று சிறையில் அடைக்கப்பட்டனர்.
விவேக் விஹார் பேபி கேர் நியூ பார்ன் சைல்டு மருத்துவமனையில் சனிக்கிழமை இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது இதில் ஏழு சிசுக்கள் உயிரிழந்தன. மேலும் ஐந்து சிசுகள் காயமடைந்தன.
இந்த வழக்கில் அம்மருத்துவமனையின் உரிமையாளர் நவீன் கிச்சி, பணியில் இருந்த டாக்டர் ஆகாஷ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்களை கடந்த 27ம் தேதி போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வந்தனர். அவர்களின் போலீஸ் காவல் முடிந்தது. இதையடுத்து, நேற்று தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் விதி குப்தா ஆனந்த் முன்னிலையில் இருவரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இருவரையும் 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க மெட்ரோ பாலிட்டன் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இந்த வழக்கில் ஜாமின் கேட்டு டாக்டர் ஆகாஷ் மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு ஜூன் 3ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
இதற்கிடையில், சிசுக்களைக் கொன்றது தொடர்பாக இருவர் மீதும் சிறார் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டத்தின் பிரிவுகளின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.