ஓசூர் இரட்டை வழி ரயில் பாதை நடப்பு ஆண்டில் முடிக்க திட்டம்
ஓசூர் இரட்டை வழி ரயில் பாதை நடப்பு ஆண்டில் முடிக்க திட்டம்
ADDED : மார் 07, 2025 11:06 PM

விஜயபுராவில் 348 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வரும் விமான நிலையம், 2025 - 26 ஆண்டு முதல் செயல்பட துவங்கும்
கார்வாரில் கப்பற்படை தளம் அருகே, விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிக்கு நிதி ஒதுக்கீடு
மைசூரு விமான நிலையத்தின் ஓடுதளத்தை 319 கோடி ரூபாய் செலவில் விரிவாக்கம் செய்யும் பணிகள் நடக்கின்றன. பணிகளை வேகமாக முடிக்க, தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்
ரயில்வே துறையுடன் இணைந்து, 16,235 கோடி ரூபாயில் 9 திட்டங்கள் நடந்து வருகின்றன. இதில், மாநில அரசு சார்பில், 9,847 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. 2025 - 26 ஆண்டுக்கு, 600 கோடி ரூபாய் ஒதுக்கீடு
பையப்பனஹள்ளி - ஓசூர்; யஷ்வந்த்பூர் - சன்னசந்திரா இடையே 70 கி.மீ., துாரத்துக்கான ஒரு வழிப்பாதை, இரட்டை வழி பாதைகளாக மாற்ற, 812 கோடி ரூபாய் செலவாகிறது. மாநில அரசு சார்பில், 406 கோடி ரூபாய் வழங்கப்படும். இரண்டு திட்டங்களும், நடப்பு ஆண்டிலேயே பொது மக்கள் பயன்பாட்டுக்கு கிடைக்கும்
பெங்களூரு புறநகர் ரயில் திட்டம், 15,767 கோடி ரூபாயில், 148 கி.மீ., துாரத்துக்கு மேற்கொள்ளப்படுகிறது. 58 ரயில் நிலையங்கள் கொண்ட இத்திட்டம், நான்கு வழித்தடங்களாக இருக்கும். இதில், இரண்டு வழித்தடங்களில் பணிகள் நடந்து வருகின்றன. மற்ற இரண்டு வழித்தடங்கள் பணிகள் விரைவில் முடித்து அமல்படுத்தப்படும்
தேவனஹள்ளியில் 407 ஏக்கர் பகுதியில், அதிநவீன 'பெங்களூரு சிறப்பு வணிக பூங்கா' அமைப்பு முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில், 50 கோடி ரூபாய் செலவில், மேம்பாலம் அமைக்கப்படும்.