ADDED : மே 10, 2024 05:23 AM

கோலார் : குடிபோதையில் மனைவி நெஞ்சில் கல்லை போட்டு கொலை செய்த கணவரை போலீசார் தேடுகின்றனர்.
கோலாரின் முல்பாகல் துடிகனஹள்ளியில் வசிப்பவர் ராமப்பா, 60; கூலி தொழிலாளி. இவரது மனைவி லட்சுமம்மா, 55. தினமும் இரவு வேலை முடிந்து வீட்டிற்கு வரும் போது, ராமப்பா மது அருந்தி வருவார். குடிபோதையில் மனைவியிடம் சண்டை போட்டு அடிப்பதை, வழக்கமாக வைத்திருந்தார்.
நேற்று முன்தினம் இரவும் குடிபோதையில் லட்சுமம்மாவை அடித்தார். பின்னர் வீட்டில் இருந்து வெளியே சென்றார். சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்த ராமப்பா, துாங்கி கொண்டு இருந்த லட்சுமம்மா, நெஞ்சில் பெரிய கல்லை துாக்கி போட்டுவிட்டு தப்பினார்.
படுகாயம் அடைந்த லட்சுமம்மா பரிதாபமாக இறந்தார். நேற்று காலை அக்கம் பக்கத்தினருக்கு, கொலை நடந்தது தெரிந்தது. தலைமறைவாக உள்ள ராமப்பாவை, முல்பாகல் போலீசார் தேடுகின்றனர்.