ADDED : ஆக 10, 2024 02:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு: எனக்கு மைசூரில் வீடு இல்லை. கடனை அடைப்பதற்கு இரண்டு வீடுகளை விற்று விட்டேன். பூஜ்ஜியத்தில் இருந்து அரசியலை ஆரம்பித்தவன் நான். 1983ல் முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்ட போது, டிபாசிட் தொகை செலுத்த பணமில்லாமல், என் அலுவலக ஊழியர் 250 ரூபாய் கொடுத்தார்.
மக்களே 63,000 ரூபாய் செலவழித்து, என்னை வெற்றிபெறச் செய்தனர். நான் சந்தித்த ஒன்பது தேர்தல்களிலும் மக்கள்தான் பணம்செலவழித்தனர்.

