தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ நான் வெற்றி பெறுவேன் ஈஸ்வரப்பா நம்பிக்கை

நான் வெற்றி பெறுவேன் ஈஸ்வரப்பா நம்பிக்கை

நான் வெற்றி பெறுவேன் ஈஸ்வரப்பா நம்பிக்கை


ADDED : ஏப் 25, 2024 11:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 25, 2024 11:21 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஷிவமொகா: ''கர்நாடகாவின் 27 தொகுதிகளில், பா.ஜ., வெற்றி பெறும். ஷிவமொகா தொகுதியில் நான் வெற்றி பெறுவேன்,'' என ஷிவமொகா தொகுதி சுயேச்சை வேட்பாளர் ஈஸ்வரப்பா தெரிவித்தார்.

ஷிவமொகாவில் நேற்று அவர் கூறியதாவது:

ஷிவமொகா நகர வளர்ச்சி ஆணைய முன்னாள் தலைவர் ரிச்சர்டு என்னை வந்து சந்தித்தார். அப்போது அவர், தனக்கு அறிமுகம் உள்ளவர்களிடம், உங்களுக்கே ஓட்டு போட வேண்டும் என, கூறுவேன் என்றார்.

ஹிந்துக்கள், முஸ்லிம், கிறிஸ்துவர் என, அனைத்து சமுதாயத்தினரும் எனக்கு ஓட்டு போடுவர்.

நான் ஹிந்துத்வாதி தானே தவிர முஸ்லிம்களை வெறுக்கும் தலைவர் அல்ல. அந்த சமுதாயத்தில் சில குண்டர்கள் இருப்பது, எனக்கு கோபத்தை அளித்துள்ளது. சாகராவை சேர்ந்த லோகோ என்பவர், எனக்கு போன் செய்தார். தன் சமுதாய பாதிரியார்கள், உங்களை ஆசிர்வதித்தனர் என, கூறினார்.

கர்நாடகாவின் 27 தொகுதிகளில், பா.ஜ., வெற்றி பெறும். ஷிவமொகா தொகுதியில் நான் வெற்றி பெறுவேன். வெற்றி பெற்ற பின், டில்லிக்கு சென்று நரேந்திர மோடி பிரதமராக வேண்டும் என, கை துாக்குவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us