அவரை வெற்றி கொள்ளவே எல்லோருக்கும் விருப்பம்; இஸ்ரோ தலைவர் யாரை சொல்றார்னு பாருங்க!
அவரை வெற்றி கொள்ளவே எல்லோருக்கும் விருப்பம்; இஸ்ரோ தலைவர் யாரை சொல்றார்னு பாருங்க!
ADDED : அக் 26, 2024 02:35 PM

புதுடில்லி: ''எலான் மஸ்க் ஒரு அற்புத மனிதர். எல்லோரும் எலான் மஸ்க்கை தோற்கடிக்கவே விரும்புகின்றனர்,'' என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார்.
டில்லி ஐ.ஐ.டி.,யில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேசியதாவது:
அமெரிக்காவில் எலான் மஸ்க் தயாரித்து ஏவிய சூப்பர் ஹெவி பூஸ்டர் ராக்கெட், சமீபத்தில் மீண்டும் பத்திரமாக பூமிக்கு திரும்பியுள்ளது. அதைப்பார்த்து மக்கள் இஸ்ரோ எப்பொழுது இந்த சாதனையை செய்ய போகிறது என மக்கள் கேட்கிறார்கள். அனைவரது கவனமும் எலான் மஸ்க் மீது உள்ளது. அவர் அங்கு என்ன செய்கிறார். அவரை நாம் எப்படி வெல்ல முடியும் என சில அருமையான யோசனைகள் உள்ளன.
எல்லோரும் அவரை வெல்ல விரும்புகிறார்கள். ஆனால் அவர் எல்லாரையும் விட சிறப்பாக செயல்படுகிறார். அவர் அற்புதமான வேலையைச் செய்யும் ஒரு பெரிய மனிதர் என்று நான் நினைக்கிறேன். இந்த வேலையால் நாம் அனைவரும் ஈர்க்கப்பட்டுள்ளோம்.
இளைஞர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பார்க்கிறார்கள். தொழில்நுட்பம் மக்களுக்குச் சென்றடையும் விதத்தில் நாங்கள் அதைப் பார்க்கிறோம்.
பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் அதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதனால் தான் விண்வெளித் துறையைத் தனியாருக்கு திறந்து விட அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு சோம்நாத் பேசினார்.