ADDED : மே 09, 2024 02:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு:இடுக்கி மாவட்டத்தில் மாவோயிஸ்ட் செயல்பாடுகளை கண்காணிக்க ஹெலிகாப்டரில் போலீசார் ஆய்வு நடத்தினர்.
கேரளாவில் வயநாடு உள்பட பல்வேறு மாவட்டங்களில் மாவோயிஸ்ட்களின் அச்சுறுத்தல் உள்ளது. வனங்களில் பதுங்கி மாவோயிஸ்ட்டுகள் செயல்படுவதால், அதனை தடுப்பது போலீசாருக்கு பெரும் சவாலாக உள்ளது.
இடுக்கி மாவட்டம் மலை சார்ந்த பகுதி என்பதால் மாவோயிஸ்ட் நடமாட்டம், பயங்கரவாத செயல்களை கண்காணிக்கும் வகையில் போலீசார் சார்பில் நேற்று ஹெலிகாப்டரில் ஆய்வு நடத்தப்பட்டது.
சாலக்குடியில் இருந்து புறப்பட்ட ஹெலிகாப்டர் பழைய மூணாறில் உள்ள மாநில விளையாட்டு குழுக்குச் சொந்தமான மைதானத்தில் தரையிறக்கப்பட்டு எரிபொருள் நிரப்பப்பட்டது.இடுக்கி எஸ்.பி. விஷ்ணுபிரதீப் மற்றும் உயர் அதிகாரிகள் ஆய்வில் பங்கேற்றனர்.