ADDED : மார் 08, 2025 01:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: தலைநகர் டில்லியின் சாணக்யபுரி பகுதியில், வெளியுறவு அமைச்சக அதிகாரிகளுக்கான குடியிருப்பு உள்ளது.
இங்கு முதல் மாடியில் உள்ள வீட்டில், வெளியுறவு அதிகாரி ஜிதேந்திர ராவத், 40, தன் தாயாருடன் வசித்து வந்தார். இவரது மனைவி மற்றும் இரு குழந்தைகள், உத்தரகண்டின் டேராடூனில் வசிக்கின்றனர்.
மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு ஜிதேந்திர ராவத் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலை, குடியிருப்பின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.