உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : ஏப் 25, 2024 02:14 AM
அ நிறம் | அளவு
முசாபர்நகர்:உத்தர பிரதேசத்தில், சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.
உ.பி., மாநிலம் ஷாம்லி மாவட்டம் ஹர்மாஜ்பூர் கிராமத்தில் வசிப்பவர் நீரஜ் குமார். ஓய்வு பெற்ற ராணுவ வீரர்.
அவரிடம் சட்டவிரோதமாக் ஆயுதங்கள் இருப்பதாக போலீசுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, நேற்று முன் தினம் மாலை தனிப்படை போலீசார், நீரஜ் குமார் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
அங்கிருந்து, ஒரு துப்பாக்கி, இரண்டு கைத்துப்பாக்கிகள் மற்றும் 65 துப்பாக்கிக் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ராணுவத்தில் பணிபுரிந்த காலத்தில், துப்பாக்கிக் குண்டுகளைத் திருடி சேர்த்து வைத்திருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட நீரஜ்குமாரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடக்கிறது.
