ADDED : மார் 07, 2025 09:53 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்காடு; கேரள மாநிலம், பாலக்காட்டில் 'இமேஜ்' என்ற படைப்பு புகைப்படக் கலைஞர்களின் அமைப்பு, ஆண்டுதோறும் புகைப்படகண்காட்சி நடத்துகிறது.
நடப்பாண்டு, 'இமேஜஸ் -- 2024' என்ற தலைப்பில் அமைப்பின், 9வது அகில இந்திய புகைப்படக் கண்காட்சி நேற்று பாலக்காடு கோட்டை மைதானம் அருகே உள்ள ஐ.எம்.ஏ., ஹாலில் துவங்கியது.
மூன்று நாட்கள் நடக்கும்கண்காட்சியை, மாவட்ட கலெக்டர் பிரியங்கா துவக்கி வைத்தார். காலை, 10.00 மணி முதல் மாலை, 7:00 மணி வரை நடக்கும் கண்காட்சியை இலவசமாக காணலாம். பிரபல புகை பட கலைஞர்களான பாலன்மாதவன், பிரவீன் மோகன்தாஸ், பிரசாந்த் ஆகியோர் அடங்கிய நடுவர் மன்றம் தேர்வு செய்த, 160 புகைப்படங்கள் கண்காட்சியில் இடம் பிடித்தன.
துவக்க நிகழ்ச்சியில், அமைப்பின் செயலாளர் வின்சென்ட், தலைவர் மோகன்தாஸ், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.