20 தொகுதிகளில் காங்., வெற்றி: குஜராத் எம்.எல்.ஏ., நம்பிக்கை
20 தொகுதிகளில் காங்., வெற்றி: குஜராத் எம்.எல்.ஏ., நம்பிக்கை
ADDED : மே 03, 2024 11:04 PM

கலபுரகி : ''கர்நாடகாவில் 20 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெறும்,'' என, குஜராத் காங்கிரஸ்எம்.எல்.ஏ., ஜிக்னேஷ் மேவானி கூறினார்.
கலபுரகி, விஜயபுராவில் காங்கிரஸ் வேட்பாளர்களைஆதரித்து, குஜராத் வட்கம் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஜிக்னேஷ் மேவானி பிரசாரம் செய்தபோது கூறியதாவது:
கர்நாடகா காங்கிரஸ் அரசு, மக்களுக்காக ஐந்து வாக்குறுதிகளை அமல்படுத்தி உள்ளது. திட்டங்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் லோக்சபா தேர்தலில், கர்நாடகாவில் காங்கிரஸ் 20 தொகுதிகளில் வெற்றி பெறும். கூடுதலாக 2 இடங்களில் வெற்றி பெறவும் வாய்ப்பு உள்ளது.
கலபுரகி காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணா தொட்டமனி, பாராம்பரிய அரசியலில் குடும்பத்தில் இருந்து வந்தவர்.
அவரது மாமா மல்லிகார்ஜுன் கார்கே, மிக சிறந்த அரசியல்வாதி. இப்போது எங்கள் கட்சியின் தலைவராக உள்ளார். அவர் கர்நாடக மண்ணின் மைந்தன். அவரது கரத்தை கன்னடர்கள் வலுப்படுத்த வேண்டும்.
எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா, உலகின் மிகப்பெரிய பாலியல் குற்றம் செய்துள்ளார்.
சிறுமி முதல் மூதாட்டி வரை அவர் யாரையும் விடவில்லை. அப்படிபட்டவரை ஆதரித்து, பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் செய்கிறார். இந்த விவகாரத்தில் பிரதமர் எதுவும் பேசாமல், அமைதியாக இருப்பது ஏன்?
இவ்வாறு அவர்பேசினார்.