sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஹரியானாவின் 9 தொகுதிகளில் பா.ஜ., - காங்கிரஸ் நேரடி போட்டி

/

ஹரியானாவின் 9 தொகுதிகளில் பா.ஜ., - காங்கிரஸ் நேரடி போட்டி

ஹரியானாவின் 9 தொகுதிகளில் பா.ஜ., - காங்கிரஸ் நேரடி போட்டி

ஹரியானாவின் 9 தொகுதிகளில் பா.ஜ., - காங்கிரஸ் நேரடி போட்டி


ADDED : ஏப் 26, 2024 09:24 PM

Google News

ADDED : ஏப் 26, 2024 09:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சண்டிகர்:ஹரியானாவில், 9 தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ., நேரடியாக மோதுகின்றன.

ஹரியானாவின் 10 லோக்சபா தொகுதிகளுக்கு மே 25ல் தேர்தல் நடக்கிறது. இங்கு, 9 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும், ஒரு தொகுதியில் மட்டும் ஆம் ஆத்மியும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன.

இதில், 8 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்துள்ளது. குருகிராம் தொகுதிக்கான வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என அக்கட்சி கூறியுள்ளது.

பா.ஜ., இங்கு தனித்துப் போட்டியிடுகிறது. எனவே, 9 தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ., இடையே நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது.

ஆனால், தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன், மார்ச் 13ம் தேதியே பா.ஜ., இங்கு 6 வேட்பாளர்களை அறிவித்து விட்டது. மீதி நான்கு வேட்பாளர்களும் மார்ச் 24ல் அறிவிக்கப்பட்டனர்.

இங்கு, பா.ஜ.,வுடன் கூட்டணியை முறித்துக் கொண்ட ஜனநாயக ஜனதா கட்சி 10 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஹரியானா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா கூறியதாவது:

அனைத்து சமூகத்தினரும் காங்கிரஸை ஆதரிக்கின்றனர். இங்கு 9 தொகுதிகளில் காங்கிரசும் பா.ஜ.,வும் நேரடியாக மோதுகின்றன. கூட்டணியை முறித்துக் கொண்டாலும் ஜனநாயக ஜனதாவும் பா.ஜ.,வும் திரைமறைவில் கைகோர்த்துதான் இருக்கின்றன.

ஜே.ஜே.பி., மற்றும் இந்திய தேசிய லோக்தளம் ஆகியவை ஓட்டுக்களைப் பிரிக்கும் கட்சிகளாகத்தான் செயல்படுகின்றன. எனவே, மக்கள் அந்தக் கட்சிகளை நிராகரிப்பர்.

மாநிலத்தில் வேலையில்லாத் திண்டாட்டம், பண வீக்கம், சட்டம் -ஒழுங்கு பிரச்னை, விவசாயிகளின் பிரச்னைகள் என ஏராளமான பற்றி எரியும் பிரச்னைகள் நிறைந்துஉள்ளன.

காங்கிரஸ் தலைமையிலான அரசு மத்தியில் பதவியேற்றதும் ஹரியானா மக்களின் அனைத்துப் பிரச்னைகளும் தீர்க்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஹரியானா மாநில காங்கிரஸ் தலைவர் உதய் பான் கூறியதாவது:

கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுல், பிரியங்கா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் ஹரியானாவில் அடுத்த மாதம் பிரசாரம் செய்கின்றனர்.

கர்னால் தொகுதியில் இளைஞரணித் தலைவர் திவ்யான்ஷு புத்திராஜா களம் இறக்கப்பட்டுள்ளார். இங்கு, பா.ஜ., சார்பில் முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார் போட்டியிடுகிறார்.

சிர்சா தொகுதியில் பா.ஜ., வேட்பாளர் அசோக் தன்வாரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் குமாரி செல்ஜா அறிவிக்கப்பட்டுள்ளார். ரோஹ்தக் பா.ஜ.,வின் அரவிந்த் சர்மாவை எதிர்த்து தீபேந்தர் ஹூடாவை காங்கிரஸ் களம் இறக்கியுள்ளது.

சிட்டிங் எம்.எல்.ஏ.,க்களான வருண் சவுத்ரி, அம்பாலா- தொகுதியிலும் பிவானி-மகேந்திரகர் தொகுதியில் ராவ் டான் சிங் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

குருஷேத்ரா தொகுதியில் மட்டும் கூட்டணிக் கட்சியான ஆம் ஆத்மியின் தலைவர் சுஷில் குப்தா போட்டியிடுகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us