வாய்ப்புகளின் பூமியில்... அமெரிக்காவில் வரவேற்பு படம் வெளியிட்டு ஸ்டாலின் பெருமிதம்
வாய்ப்புகளின் பூமியில்... அமெரிக்காவில் வரவேற்பு படம் வெளியிட்டு ஸ்டாலின் பெருமிதம்
ADDED : ஆக 29, 2024 08:41 AM

வாஷிங்டன்: அமெரிக்கா வாழ் தமிழர்கள் வரவேற்பு அளித்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, 'வாய்ப்புகளின் பூமியான அமெரிக்காவில் இருக்கிறேன்' என முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முதல்வர் ஸ்டாலின் அரசுமுறை பயணமாக, நேற்று முன்தினம்(ஆகஸ்ட் 27) இரவு அமெரிக்கா புறப்பட்டு சென்றார். சான்பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு அமெரிக்கா வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில்,இன்று(ஆகஸ்ட் 29) அமெரிக்கா வாழ் தமிழர்கள் வரவேற்பு அளித்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் பகிர்ந்துள்ளார். ''தமிழகம் செழுமை பெற அமெரிக்கா வந்துள்ளேன். வாய்ப்புகளின் பூமியான அமெரிக்காவில் இருக்கிறேன்' என ஸ்டாலின் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
சான்பிரான்சிஸ்கோவில் இன்று நடக்கும் முதலீட்டாளர்கள் சந்திப்பில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார். அது மட்டுமின்றி, பல்வேறு தொழில் நிறுவன உரிமையாளர்களை தனித்தனியாகவும் சந்தித்துப்பேசுகிறார். ஒரு சில முன்னணி தொழில் நிறுவனங்களுக்கும் அவர் நேரில் சென்று பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு செப்டம்பர் 14ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.