பத்திரிகையாளர் ஓய்வூதியம் உயர்வு சினிமா துறைக்கு 'தொழில்' அந்தஸ்து
பத்திரிகையாளர் ஓய்வூதியம் உயர்வு சினிமா துறைக்கு 'தொழில்' அந்தஸ்து
ADDED : மார் 08, 2025 02:12 AM

சினிமா துறைக்கு 'தொழில்' அந்தஸ்து வழங்கப்படும். தொழில் துறை கொள்கையின் கீழ் வழங்கப்படும் வசதிகள், சினிமா துறைக்கும் விரிவுபடுத்தப்படும்
பெங்களூரின் நந்தினி லே - அவுட்டில் கர்நாடக திரைப்பட அகாடமிக்கு சொந்தமான 2.5 ஏக்கர் நிலத்தில், பொது தனியாருடன் இணைந்து, மல்டிபிளக்ஸ் திரைப்பட அரங்க வளாகம் கட்டப்படும்
கன்னட திரைப்படங்களை பாதுகாக்கும் நோக்கில், 3 கோடி ரூபாய் செலவில் டிஜிட்டல் மற்றும் டிஜிட்டல் அல்லாத வடிவில் 'கன்னட திரைப்படங்களின் களஞ்சியம்' உருவாக்கப்படும்
சிரமங்களை எதிர்கொள்ளும் பத்திரிகையாளர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியம் 12,000 ரூபாயில் இருந்து 15,000 ரூபாயாகவும்; குடும்ப ஓய்வூதியம் 6,000 ரூபாயில் இருந்து 7,500 ரூபாயாக உயர்த்தப்படும்
மாநிலத்தில் உள்ள 2,500 அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர்கள், அவர்களை சார்ந்தோருக்கு 5 லட்சம் ரூபாய் வரை பணமில்லா சிகிச்சை அளிக்கும், 'முதல்வர் மத்திய சஞ்சீவினி' திட்டம் செயல்படுத்தப்படும்
கன்னட திரைப்படங்களை விளம்பரப்படுத்த, மாநிலத்தில் ஓ.டி.டி., தளம் உருவாக்கப்படும்
மைசூரில் 500 கோடி ரூபாய் செலவில் சர்வதேச அளவிலான திரைப்பட நகரம் உருவாக்க, 150 ஏக்கர் நிலம் தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளது.