கலை, இலக்கியம், கலைஞர்களின் மாதாந்திர உதவித்தொகை அதிகரிப்பு
கலை, இலக்கியம், கலைஞர்களின் மாதாந்திர உதவித்தொகை அதிகரிப்பு
ADDED : மார் 08, 2025 02:19 AM
பாகல்கோட், பாதாமியில் நடக்கும் சாளுக்ய உற்சவத்தில், 2 கோடி ரூபாய் செலவில், 'நிருத்யோத்சவா' ஏற்பாடு.
பெங்களூரில் பசவண்ணர் ஆன்மிக மற்றும் வசனங்கள் ஆய்வு மையம்.
மத்திய சாகித்ய அகாடமி விருது பெற்ற மொளவாரு முகமதுவின் 'சுதந்திர ஓட்டம்' காவியம், 1 கோடி ரூபாய் செலவில் நாடகமாக்கி, மாநிலம் முழுதும் அரங்கேற்றப்படும்.
'கன்னட பாரதி' பெயரில், 50 லட்சம் ரூபாய் செலவில், சாதனையாளர்களின் வாழ்க்கையை அறிமுகம் செய்யும் புத்தகங்கள் வெளியிடப்படும்.
தாவணகெரேவின், கொன்டஜ்ஜி மலையில் அமைக்கப்பட்டுள்ள நாடக மன்றத்தில், 3 கோடி ரூபாய் செலவில் அடிப்படை வசதிகள் செய்யப்படும். இதன் வளாகத்தில் திரையரங்கு, அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
கலை, இலக்கியம், கலாசார கலைஞர்களின் மாத உதவித்தொகை 2,000 ரூபாயில் இருந்து, 2,500 ரூபாயாக அதிகரிக்கப்படும்.
தேசிய கவிஞர் சிவ ருத்ரப்பா டிரஸ்ட் நிகழ்ச்சிகள் நடத்த, 1 கோடி ரூபாய் செலவில் கட்டடம்.
பெலகாவியின் கட்டபிரபாவில் 2 கோடி ரூபாய் செலவில், சுதந்திர போராட்ட தியாகி ஹர்டிகர் நினைவு மண்டபம். மைசூரு பல்கலைக்கழகத்தின், குவெம்பு கன்னட ஆய்வு மையத்தில் உள்ள 2,500 புராதன ஆவணங்கள், ஒரு கோடி ரூபாய் செலவில் டிஜிட்டல் மயம்.
சமத்துவத்தை எடுத்துரைத்த ராம் மனோகர் லோஹியா உட்பட மற்ற மகான்களின் புத்தகங்களில் உள்ள அம்சங்கள் தொகுப்பை கன்னடத்தில் வெளியிட்டு, இன்றைய தலைமுறையினருக்கு அறிமுகம் செய்யப்படும்.
மைசூரின் நாடக மன்றத்தின் நிகழ்ச்சிகளுக்கு, 2 கோடி ரூபாய் நிதியுதவி.
கனகதாசர் ஆய்வு மையத்துக்கு 1 கோடி ரூபாய்.
கல்வி வல்லுனர் நரசிம்மையாவை நினைவு கூரும் வகையில், நரசிம்மையா ஆணையம்.