வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பு; சுகாதாரத்துறை ஆலோசனை
வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பு; சுகாதாரத்துறை ஆலோசனை
ADDED : ஏப் 14, 2024 09:50 PM
பெங்களூரு : வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பதால், மக்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தும்படி, சுகாதாரத்துறை அறிவுறுத்திஉள்ளது.
இது தொடர்பாக, சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: கர்நாடகாவில் வெப்பத்தின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. குழந்தைகள், கர்ப்பிணியர், மூத்த குடிமக்களின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காண்பிப்பது நல்லது.
வெப்ப காற்று வீசுவதால், உடலில் நீர்ச்சத்து குறைந்து, 'சன் ஸ்ட்ரோக்' ஏற்படும் அபாயம் உள்ளது.
இதை தவிர்க்க அவ்வப்போது தண்ணீர் குடிக்க வேண்டும். எலுமிச்சை பழ ரசம், மோர், லஸ்ஸி, பழ ரசங்களை அதிகம் குடிக்க வேண்டும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை:
l மதிய நேரத்தில் கஷ்டமான வேலைகளை செய்யாதீர்கள்
l அதிகமான தண்ணீர் குடியுங்கள்
l உடலை இறுக்கி பிடிக்காத, வெளிர் நிற பருத்தி உடைகள் அணியுங்கள்
l வெளி வளாகத்தில் பணியாற்றும் போது, அவ்வப்போது ஓய்வு எடுங்கள்
l வெயிலில் இருந்து தப்பிக்க, குடை, தொப்பி, துண்டு பயன்படுத்துங்கள்
l குளிர்ந்த நீரில் குளியுங்கள்
l மதியம் 12:00 மணி முதல் 3:00 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்
l மதுபானம், டீ, காபி பானங்கள் குடிக்காதீர்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

