sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அதிகரிக்கும் காற்று மாசு ஆண்டுக்கு 2,100 பேர் பலி

/

அதிகரிக்கும் காற்று மாசு ஆண்டுக்கு 2,100 பேர் பலி

அதிகரிக்கும் காற்று மாசு ஆண்டுக்கு 2,100 பேர் பலி

அதிகரிக்கும் காற்று மாசு ஆண்டுக்கு 2,100 பேர் பலி


ADDED : ஜூலை 08, 2024 06:44 AM

Google News

ADDED : ஜூலை 08, 2024 06:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: 'கார்டன் சிட்டியான பெங்களூரில், காற்று மாசுவால், ஆண்டுக்கு 2,100 பேர் இறப்பதாக தெரிய வந்துள்ளது' என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

பூங்கா நகரம் என பெயர் பெற்ற, கர்நாடக தலைநகரான பெங்களூரு, தற்போது கான்கிரீட் நகரமாக மாறி வருகிறது. எங்கு பார்த்தாலும் உயரமான கட்டடங்கள் காணப்படுகிறது; வாகனங்களின் சத்தம் ஒலிக்கிறது.

வளர்ச்சி என்ற பெயரில், மரங்கள் வெட்டப்படுவதால், சுத்தமான காற்று கிடைப்பதில்லை. இதனால் பெங்களூரில் காற்று மாசு அதிகரித்து வருகிறது.

இது தொடர்பாக, உலக சுகாதார அமைப்பு ஆய்வு நடத்தியது.

ஆய்வில், 'முதல் பத்து இடத்தில் முதலிடத்தில் புதுடில்லி உள்ளது. அடுத்ததாக, பெங்களூரு, ஆமதாபாத், சென்னை, ஹைதராபாத், கோல்கத்தா, மும்பை, புனே, சிம்லா, வாரணாசி ஆகியவை உள்ளன.

இதுவரை, இந்த நகரங்களில் ஆண்டுக்கு மொத்தம் 33,000 பேர், காற்று மாசுவால் இறந்து உள்ளதாக தெரியவந்துள்ளது.

இதுவே பெங்களூரில் ஆண்டுக்கு 2,100 பேர் இறக்கின்றனர். உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்படி நடக்காததால், இந்நகரங்களின் காற்று மாசு, மேலும் மோசமாகும் வாய்ப்பு உள்ளது.

பெங்களூரில் காற்று மாசு குறையவில்லை என்றால், வருங்காலத்தில் தற்போது புதுடில்லியில் மக்கள் சந்தித்து வரும் நிலை தான் ஏற்படும்.

காற்று மாசு, ஒலி மாசு, குடிநீர் மாசு போன்றவற்றால் பல நோய்கள் அதிகரித்து வருகின்றன. நகரில் முதலில் பசுமையான சூழ்நிலையை உருவாக்க வேண்டும். அப்போது தான் நோய்கள் குறையும் என டாக்டர்கள் கூறுகின்றனர்.

பாபுஜி நகரில் 57, பொம்மனஹள்ளியில் 42, பிரிகேட் சாலையில் 57, பி.டி.எம்., லே - அவுட்டில் 57, சிட்டி ரயில் நிலையத்தில் 66, ஹெப்பாலில் 68, கோரமங்களாவில் 60, ஒயிட்பீல்டில் 57 சதவீதம் காற்று மாசு ஏற்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us