ADDED : மே 26, 2024 06:36 AM
l இந்த தேர்தலில் வாக்காளர்கள் ஓட்டுச்சீட்டு முறையில், ஓட்டுப்பெட்டியில் ஓட்டுப்போடுவர்
l லோக்சபா தேர்தலில் ஓட்டுப் போட்டவர்களுக்கு, இடது கையின் ஆள் காட்டி விரலில் அழியா மை வைக்கப்பட்டது. மேலவை தேர்தலில், வலது கை ஆள் காட்டி விரலில் அழியா மை வைக்கப்படும்
l அனைத்து வாக்காளர்களுக்கும், தாங்கள் எந்த ஓட்டுச்சாவடியில் ஓட்டுப் போட வேண்டும் என்ற விபரம் அறியும் வகையில், கியூ.ஆர்.கோட் சீட்டுகளை, தேர்தல் கமிஷன் வழங்கி வருகிறது
lஅதிக பட்சமாக கர்நாடக வடகிழக்கு பட்டதாரி தொகுதியில் 1.56 லட்சம் வாக்காளர்களும், குறைந்த பட்சமாக கர்நாடக தெற்கு ஆசிரியர் தொகுதியில் 21,549 வாக்காளர்களும் உள்ளனர்.
lஅதிக பட்சமாக கர்நாடக வடகிழக்கு பட்டதாரி தொகுதியில் 194 ஓட்டுச்சாவடிகளும், குறைந்த பட்சமாக கர்நாடக தெற்கு ஆசிரியர் தொகுதியில் 44 ஓட்டுச்சாவடிகளும் அமைக்கப்பட்டு உள்ளன.
l ஜூன் 3ம் தேதி காலை 8:00 மணிக்கு துவங்கும் ஓட்டுப்பதிவு, மாலை 4:00 மணிக்கு நிறைவு பெறுகிறது. முடிவதற்கு, 48 மணி நேரத்துக்கு முன்னதாக பிரசாரம் ஓயும். அந்த வகையில், ஜூன் 1ம் தேதி மாலை 4:00 மணிக்கு பிரசாரம் நிறைவு பெறும்
l ஜூன் 6ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடந்தாலும், ஜூன் 12ம் தேதி வரை, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்.