sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சென்னப்பட்டணாவில் சுயேச்சையாக போட்டி: பா.ஜ., - எம்.எல்.சி., யோகேஸ்வர் 'முரண்டு'

/

சென்னப்பட்டணாவில் சுயேச்சையாக போட்டி: பா.ஜ., - எம்.எல்.சி., யோகேஸ்வர் 'முரண்டு'

சென்னப்பட்டணாவில் சுயேச்சையாக போட்டி: பா.ஜ., - எம்.எல்.சி., யோகேஸ்வர் 'முரண்டு'

சென்னப்பட்டணாவில் சுயேச்சையாக போட்டி: பா.ஜ., - எம்.எல்.சி., யோகேஸ்வர் 'முரண்டு'

1


ADDED : ஆக 13, 2024 07:38 AM

Google News

ADDED : ஆக 13, 2024 07:38 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: ''சென்னப்பட்டணா தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புகிறேன். எனக்கு சீட் கிடைக்கா விட்டால், சுயேச்சையாக போட்டியிடுவேன்,'' என, பா.ஜ., - எம்.எல்.சி., யோகேஸ்வர் தெரிவித்தார்.

ராம்நகரின், சென்னப்பட்டணா தொகுதி ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,வாக இருந்த குமாரசாமி, இம்முறை லோக்சபா தேர்தலில், மாண்டியா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது மத்திய கனரக தொழில் துறை அமைச்சராக உள்ளார்.

சிவகுமார் திட்டம்


இவரால் காலியான சென்னப்பட்டணா சட்டசபை தொகுதிக்கு, இடைத்தேர்தல் நடக்கும்போது, தொகுதியை கைப்பற்றுவதன் மூலம், பெங்களூரு ரூரல் லோக்சபா தொகுதியில், தன் தம்பி சுரேஷின் தோல்விக்கு, பழிதீர்க்க துணை முதல்வர் சிவகுமார் திட்டமிட்டுள்ளார்.

இதுவரை சென்னப்பட்டணா தொகுதியில் ஆர்வம் காண்பிக்காத இவர், தற்போது பல முறை தொகுதிக்கு வருகிறார். உருக்கமாக உரையாற்றி மக்களின் மனதில் இடம் பிடிக்க முயற்சித்தார்.

குமாரசாமியும் தொகுதியை விட்டுவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். தன் மகன் நிகிலை களமிறக்க ஆலோசிப்பதாக கூறப்படுகிறது.

ஆனால், கூட்டணி வேட்பாளராக தனக்கு சீட் கொடுக்கும்படி, பா.ஜ., - எம்.எல்.சி., யோகேஸ்வர் பிடிவாதம் பிடிக்கிறார். பல முறை டில்லிக்குச் சென்று, மத்திய அமைச்சர் குமாரசாமியை சந்தித்துப் பேசினார்.

இதற்கிடையில் டில்லிக்கு வரும்படி, யோகேஸ்வருக்கு பா.ஜ., மேலிடம் அழைப்பு விடுத்துள்ளதால், நேற்று டில்லிக்குச் சென்றார்.

அதற்கு முன்பு பெங்களூரில் அவர் அளித்த பேட்டி:

சென்னப்பட்டணா தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட, நான் ஆர்வமாக இருக்கிறேன். ஏற்கனவே பல முறை, நான் சுயேச்சையாக போட்டியிட்டபோது, தொகுதி மக்கள் என்னை ஆதரித்து வெற்றி பெற வைத்தனர்.

காங்கிரசுக்கு எதிர்ப்பு


தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக போட்டியிட வேண்டும் என்பது என் விருப்பம். ஒருவேளை நிறைவேறாவிட்டால், சுயேச்சையாக போட்டியிடுவேனே தவிர, காங்கிரசில் இணைய மாட்டேன். இதுவரை காங்., தலைவர்கள் யாரும், என்னை தொடர்பு கொள்ளவில்லை.

சென்னப்பட்டணா தொகுதியில் போட்டியிடும்படி, மக்களும் எனக்கு நெருக்கடி கொடுக்கின்றனர். எந்த காரணத்தை கொண்டும், இத்தொகுதியை காங்கிரசுக்கு விட்டுக் கொடுக்க முடியாது.

இதுகுறித்து, பா.ஜ., மேலிடத் தலைவர்களுடன் ஆலோசிக்க டில்லி செல்கிறேன்.

எனக்கு சீட் கொடுப்பதாக, எங்கள் தலைவர்கள் உறுதி அளித்துள்ளனர். லோக்சபா தேர்தலில் கூட்டணி வைக்கும்படி, ஆலோசனை கூறியதே நான் தான். பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்திராவிட்டால், ம.ஜ.த.,வின் நிலை என்ன ஆகியிருக்கும்?

இதை மனதில் கொண்டு, கூட்டணிக் கட்சியினர் ஒருமித்த கருத்துடன், என்னை களமிறக்குவர் என, நம்புகிறேன்.

இவ்வாறு அவர்கூறினார்.






      Dinamalar
      Follow us