சிறையில் இருந்து சுயேட்சை எம்.பி.யான பயங்கரவாதிக்கு ஜாமின்
சிறையில் இருந்து சுயேட்சை எம்.பி.யான பயங்கரவாதிக்கு ஜாமின்
ADDED : செப் 10, 2024 09:11 PM

புதுடில்லி: திகார் சிறையில் இருந்து கொண்டு சுயேட்சை எம்.பி.யாக தேர்வு பெற்ற பயங்கரவாதி அப்துல் ரஷீத்திற்கு கோர்ட் இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
லோக்சபா தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டவர் ஷேக் அப்துல் ரஷீத். பயங்கரவாத அமைப்புக்கு நிதிதிரட்டியதாக 2019-ம் ஆண்டு என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு ஏஜென்சி போலீசாரால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் இருந்த படியே நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் காஷ்மீரின் பாராமுல்லா தொகுதியில் தேசிய மாநாட்டு கட்சியின் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லாவை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தான் எம்.பி.யாக பதவியேற்க என்.ஐ.ஏ, கோர்ட்டில் ரஷீத் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி கிரண் குப்தா அனுமதி வழங்கினார். என்.ஐ.ஏ., போலீஸ் பாதுகாப்புடன் கடந்த ஜூலை 02 -ம் தேதி பாராளுமன்றத்தில் எம்.பி.,யாக பதவியேற்றார்.
இந்நிலையில் நடக்கவுள்ள ஜம்மு-காஷ்மீர் சட்டசபை தேர்தலில் பிரசாரம் செய்ய வேண்டி தனக்கு இடைக்கால ஜாமின் கோரி டில்லி கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சந்தர்ஜித்சிங், இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

