ஊழல்வாதிகளைக் காப்பாற்றுங்கள் என்கிறார்கள் இண்டியா கூட்டணியினர்: நட்டா விமர்சனம்
ஊழல்வாதிகளைக் காப்பாற்றுங்கள் என்கிறார்கள் இண்டியா கூட்டணியினர்: நட்டா விமர்சனம்
ADDED : மே 09, 2024 02:43 PM

போபால்: 'ஊழல்வாதிகளை அகற்றுங்கள் என்று மோடி கூறுகிறார். ஆனால் ஊழல்வாதிகளைக் காப்பாற்றுங்கள் என இண்டியா கூட்டணியினர் கூறுகிறார்கள்' என பா.ஜ., தேசிய தலைவர் நட்டா கூறினார்.
மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் சித்ரகூட் என்ற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் நட்டா பேசியதாவது: 10 வருடங்களுக்கு முன், மக்களை திருப்திப்படுத்தும் அரசியல் நடந்து வந்தது. ஆனால் பிரதமர் மோடி 10 ஆண்டுகளில் வளர்ச்சி அரசியலை முன்னெடுத்து உள்ளார். இது தான் மோடியின் கலாசாரம். சொல்லாததையும் பிரதமர் மோடி செய்திருக்கிறார்கள்.
ஊழல்வாதிகள்
தலித், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை பறிக்க காங்கிரஸ் முயற்சி செய்து வருகிறது. மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் விரும்புகிறது. ஊழல்வாதிகளை அகற்றுங்கள் என்று மோடி கூறுகிறார். ஆனால் ஊழல்வாதிகளைக் காப்பாற்றுங்கள் என இண்டியா கூட்டணியினர் கூறுகிறார்கள். இண்டியா கூட்டணி ஊழல்வாதிகளின் கூட்டம். இவ்வாறு அவர் பேசினார்.