பாகிஸ்தானை தோற்கடித்து இந்தியா 'மாஸ்' ; ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையில் அரையிறுதிக்கு தகுதி
பாகிஸ்தானை தோற்கடித்து இந்தியா 'மாஸ்' ; ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையில் அரையிறுதிக்கு தகுதி
ADDED : செப் 14, 2024 04:28 PM

மோகி: ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் பாகிஸ்தானை தோற்கடித்த இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
சீனாவின் மோகி நகரில் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொண்டு விளையாடியது. இதில், கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங்கின் அபார ஆட்டத்தால் 2-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை தோற்கடித்து, அரையிறுதிக்கு முன்னேறியது.
அதிர்ச்சி
ஆட்டம் தொடங்கிய 8வது நிமிடத்திலேயே பாகிஸ்தான் அணியின் அகமது நதீம் முதல் கோலை அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். அதன்பிறகு, சிறப்பான ஆட்டத்தை இந்திய அணி வீரர்கள் வெளிப்படுத்தினர். கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங், இரு கோல்களை அடித்து இந்திய அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார்.
முன்னேற்றம்
பாகிஸ்தான் அணியால் பதிலுக்கு கோல்கள் அடிக்க முடியவில்லை. இதனால், 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
மாஸ்
ரவுண்ட் ராபின் சுற்றில் இந்திய அணி விளையாடிய 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.