அண்டை நாடுகளுடன் நல்லுறவை பேணும் இந்தியா: ராஜ்நாத் சிங் சொல்கிறார்!
அண்டை நாடுகளுடன் நல்லுறவை பேணும் இந்தியா: ராஜ்நாத் சிங் சொல்கிறார்!
UPDATED : ஏப் 06, 2024 09:50 AM
ADDED : ஏப் 06, 2024 09:05 AM

புதுடில்லி: 'இந்தியா எப்போதும் தனது அண்டை நாடுகளுடன் நல்லுறவைப் பேண விரும்புகிறது' என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: ஜம்மு காஷ்மீரில் ஆயுதப்படை சிறப்பு சட்டத்தை ரத்து செய்வதற்கான காலம் வந்துவிட்டது. இது குறித்து உள்துறை அமைச்சகம் தான் முடிவு எடுக்க வேண்டும். பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகளை பாகிஸ்தான் புரிந்து கொண்டுள்ளது.
நல்லுறவு
இந்தியாவுக்கு எதிராக, பயங்கரவாத செயல்களில் ஈடுபட முயன்று விட்டு, அவர்கள் பாகிஸ்தானுக்கு ஓடிவிட்டால், அவர்களைக் கொல்ல பாகிஸ்தானுக்குள் நுழைவோம்.இந்தியா எப்போதும் தனது அண்டை நாடுகளுடன் நல்லுறவைப் பேண விரும்புகிறது. இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதம் வெளிநாட்டு மண்ணிலும் ஒழிக்கப்பட வேண்டும். எந்த ஒரு அண்டை நாட்டின் நிலப்பரப்பையும் இந்தியா ஆக்கிரமித்தது கிடையாது.
விட மாட்டோம்
இந்தியாவுக்கு எதிராக யாரேனும் பயங்கரவாதத்தை தூண்டினால் , நாங்கள் அவர்களை விட்டுவிட மாட்டோம். பாகிஸ்தானால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கும். அந்த பகுதி மக்கள் இந்தியாவுடன் இருக்க வேண்டும் என்று தான் விரும்புகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

