வளர்ச்சி,தொழில்நுட்பத்தில் இந்தியா, அமெரிக்கா முன்னேற்றம்: அமெரிக்க தூதர்
வளர்ச்சி,தொழில்நுட்பத்தில் இந்தியா, அமெரிக்கா முன்னேற்றம்: அமெரிக்க தூதர்
UPDATED : மே 26, 2024 10:42 PM
ADDED : மே 26, 2024 10:19 PM

பெங்களூரு:இஸ்ரோ தலைவர் சோமநாத்தை சந்தித்தார் இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் எரிக்கார்செட்டி
விண்வெளி துறை வணிக தலைவர்கள் மற்றும் தொழில் முனைவோர்களை சந்திப்பதற்காக இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் எரிக்கார்செட்டி பெங்களூரு வந்தார்.
அவர் நிசார் எனப்படும் நாசா-இஸ்ரோ செயற்கை ரேடார் பணி உட்ப விண்வெளி ஒத்துழைப்பு குறித்து விவாதித்தார். தொடர்ந்துதொழில்துறை தலைவர்கள் மற்றும் அமெரிக்க வர்த்தக சம்மேளன உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார். தொடர்ந்து அவர் பேசுகையில் இஸ்ரோ தலைவர் சோமநாத்தை சந்தித்ததில் மகிழ்ச்சி கொள்கிறேன். அமெரிக்காவும் இந்தியாவும் விண்வெளி ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வழிகளில் இதுவும் ஒன்றாகும் என்றார்.
முன்னதாக மும்பையில் நடந்த நிகழ்ச்சியில்பங்கு கொண்ட எரிக்கார்செட்டி பேசுகையில் பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்கானஅமெரிக்கா-இந்தியா கூட்டணி புதிய கூட்டாளர்களுடன் வளர்ந்து வருவதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
யுனைடெட் ஸ்டேட்ஸ் இன்டர்நேஷனல் டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு இலக்குகளை பூர்த்தி செய்ய 3.8 பில்லியன் டாலர் முதலீடு செய்கிறது, அதே நேரத்தில் விவசாயம், சுகாதாரம் மற்றும் நிதி சேவைகளை ஆதரிக்கிறது,மேலும் இரு நாடுகளும் வளர்ச்சியில் மட்டும் முன்னேறவில்லை, தொழில்நுட்பத்தில் முன்னேறி வருகிறது இவ்வாறு அவர் கூறினார்.