இந்திய கடற்படை தளபதியும், ராணுவ தளபதியும் ஒரே "கிளாஸ் மேட்"
இந்திய கடற்படை தளபதியும், ராணுவ தளபதியும் ஒரே "கிளாஸ் மேட்"
ADDED : ஜூன் 30, 2024 01:16 PM

புதுடில்லி: நம் நாட்டின் ராணுவ புதிய தலைமை தளபதியாக ஜெனரல் உபேந்திரா திவேதி இன்று (ஜூன் 30) பொறுப்பேற்றார். இந்திய கடற்படை தலைமை தளபதியாக உள்ள தினேஷ் குமாரும், இன்று ராணுவ தலைமை தளபதி உபேந்திரா திவேதியும் ஒரே வகுப்பில் கல்வி பயின்று உள்ளனர்.
இந்திய ராணுவ தளபதியாக இருந்த மனோஜ் பாண்டேயின் பதவிக்காலம் இன்றுடன் (ஜூன் 30) நிறைவு பெறுகிறது. புதிய ராணுவ தலைமை தளபதியாக உபேந்திரா திவேதி பொறுப்பேற்றார். உபேந்திரா, 1984 இல் தனது ராணுவ சேவையை ஜம்மு காஷ்மீர் காலாற்படையின் 18வது படையணியில் துவங்கினார்.
கடந்த 39 வருட காலமாக ராணுவ சேவை ஆற்றி வரும் உபேந்திரா, காஷ்மீரிலும், ராஜஸ்தானிலும் திறமையான வகையில் தனது படைபயணியை வழி நடத்தி உள்ளார். ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ராணுவத் தலைமையகத்தில் துணைத் தலைவராகவும் லெப்டினென்ட் ஜெனரல் உபேந்திரா பணியாற்றியுள்ளார்.
ஒரே 'கிளாஸ் மேட்'
இந்திய கடற்படையின், 26வது தலைமை தளபதியாக, தினேஷ் குமார் திரிபாதி, (வயது 60) பதவி வகித்து வருகிறார். மத்தியப் பிரதேசத்தில் உள்ள பள்ளியில், 1970ம் ஆண்டு 5ம் வகுப்பு, தினேஷ் குமாரும், உபேந்திரா திவேதியும் கல்வி பயின்று உள்ளனர். இருவரும் ஒரே 'கிளாஸ் மேட்'. இரு அதிகாரிகளுக்கு இடையேயான வலுவான பிணைப்பையும் நீடித்த நட்பையும் எடுத்துக்காட்டுகிறது.
அஞ்சலி
மனோஜ் பாண்டே பதவிக்காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில், தேசிய போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 26 மாத பதவிக்காலத்திற்கு பிறகு இன்று அவர் ஓய்வு பெறுகிறார்.