இந்திய வீரர்கள் குற்றவாளிகள்! உ.பி.,போலீஸ் வினோத வாழ்த்து
இந்திய வீரர்கள் குற்றவாளிகள்! உ.பி.,போலீஸ் வினோத வாழ்த்து
UPDATED : ஜூன் 30, 2024 08:10 PM
ADDED : ஜூன் 30, 2024 07:45 PM

லக்னோ: தென்னாப்பிரிக்காவின் இதயங்களை உடைத்த வகையில் இந்திய வீரர்கள் குற்றவாளிகள் எனவும் அதற்கு தண்டனை ஒரு பில்லியன் ரசிகர்களின் வாழ்நாள் காதல் எனசமூக வலை தளத்தில் பதிவிட்டு உள்ளது.
நடந்துமுடிந்த உலககோப்பை டி 20 போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இரண்டாம் முறையாக கோப்பையை வென்றது. இதனையடுத்து பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் இந்திய அணிக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் உ.பி.,போலீசாரும் தங்களின் பங்குக்கு தங்களின் பாணியிலேயே எக்ஸ் வலை தளத்தில் வாழ்த்து தெரிவித்து இருப்பது அனைவரையும் கவர்ந்துள்ளது. பதிவில் அவர்கள் தெரிவித்து இருப்பதாவது: தென்னாப்பிரிக்காவின் இதயங்களை உடைத்த வகையில் இந்திய வீரர்கள் குற்றவாளிகள் எனவும் அதற்கு தண்டனை ஒரு பில்லியன் ரசிகர்களின் வாழ்நாள் காதல் பதிவிட்டு உள்ளனர்.