ADDED : ஜூலை 18, 2024 12:29 AM
மஸ்கட்: ஓமன் நாட்டில் மசூதி அருகே பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் இந்தியர் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர்.
மேற்காசிய நாடான ஓமன் தலைநகர் மஸ்கட்டில் உள்ள ஷியா முஸ்லிம்களுக்கு சொந்தமான இமாம் அலி மசூதி முன் கடந்த 15ம் தேதி இரவில் மர்மநபர்கள் திடீரென துப்பாக்கியால் சுட்டனர்.
இதில், இந்தியாவை சேர்ந்த ஒருவர், நான்கு பாகிஸ்தானியர்கள் மற்றும் ஒரு போலீஸ்காரர் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர். மேலும் 28 பேர் காயம் அடைந்தனர்.
மஸ்கட்டில் உள்ள இந்திய துாதரகம் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு:
துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறோம். அவர்களது குடும்பத்துக்கு தேவையான உதவிகளை செய்ய அரசு தயாராக உள்ளது.
ஆறு பேரை கொலை செய்த மூன்று பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.