தேச விரோதிகளின் பக்கம் நிற்கும் இண்டியா கூட்டணியினர்: நட்டா தாக்கு
தேச விரோதிகளின் பக்கம் நிற்கும் இண்டியா கூட்டணியினர்: நட்டா தாக்கு
ADDED : மே 05, 2024 04:15 PM

ராய்ப்பூர்: காங்கிரசும், இண்டியா கூட்டணியும் சனாதனத்துக்கு எதிரானவர்கள். அவர்கள் தேச விரோதிகளின் பக்கம் நிற்கிறார்கள் என பா.ஜ., தேசிய தலைவர் நட்டா பேசினார்.
சத்தீஸ்கரின் சூரஜ்பூரில் நடந்த நிகழ்ச்சியில் நட்டா பேசியதாவது: முன்பெல்லாம் பெண்கள் புறக்கணிக்கப்பட்டார்கள். பா.ஜ., ஆட்சியில் ஏழைகள், தலித்துகள், பழங்குடியினர், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் என அனைவரும் பயன் அடைந்துள்ளனர். ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஏழைக்கும் இன்று 5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை வசதி கிடைக்கிறது. காங்கிரசும், இண்டியா கூட்டணியும் சனாதனத்துக்கு எதிரானவர்கள். அவர்கள் தேச விரோதிகளின் பக்கம் நிற்கிறார்கள்.
இட ஒதுக்கீடு
பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., ஆட்சியில் இந்தியா வளர்ந்த நாடாக மாறி வருகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு ஓட்டு வங்கி, சாதி, மத அரசியல் இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசியலின் வரையறை மற்றும் கலாசாரத்தை மாற்றியுள்ளார். இப்போது வளர்ச்சி அரசியல் உள்ளது. தலித்துகள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டைப் பறித்து முஸ்லிம்களுக்கு வழங்க காங்கிரஸ் விரும்புகிறது. இவ்வாறு நட்டா பேசினார்.