இந்திய பாராலிம்பிக் வீரர் பிரமோத் பகத் தகுதி நீக்கம்: காரணம் இதுதான்!
இந்திய பாராலிம்பிக் வீரர் பிரமோத் பகத் தகுதி நீக்கம்: காரணம் இதுதான்!
ADDED : ஆக 13, 2024 10:30 AM

புதுடில்லி: இந்திய பாரா பாட்மின்டன் வீரர் பிரமோத் பகத் போட்டிகளில் பங்கேற்க ,18 மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 12 மாதங்களில் 3 முறை ஊக்கமருந்து சோதனையில் சிக்கியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்காக தங்கப் பதக்கம் வென்றிருந்தவர் பிரமோத் பகத். இவர் மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா பாட்மின்டன் போட்டியில், இந்தியாவுக்காக விளையாடி அசத்தியுள்ளார்.
ஊக்க மருந்து
இவர் ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றத்திற்காக பாரீஸ் பாராலிம்பிக்கில் இருந்து வெளியேற்றப்பட்டார். கடந்த 12 மாதங்களில் 3 முறை ஊக்க மருந்து சோதனையில் சிக்கியதாலும் பிரமோத் பகத் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
போட்டியில் பங்கேற்க முடியாது!
விதிமுறைகளை மீறியதாலும், எங்கிருக்கிறார் என்ற தகவல் தெரிவிக்காததாலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 18 மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டதால், பாரிஸ் பாராலிம்பிக் போட்டியில் பிரமோத் பகத் பங்கேற்க முடியாது.

