sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இந்திரா உணவக கட்டடம் தயார்... அமலுக்கு வருவது எப்போது? தங்கவயலில் தேய்ந்த ரிக்கார்டு மாறுமா?

/

இந்திரா உணவக கட்டடம் தயார்... அமலுக்கு வருவது எப்போது? தங்கவயலில் தேய்ந்த ரிக்கார்டு மாறுமா?

இந்திரா உணவக கட்டடம் தயார்... அமலுக்கு வருவது எப்போது? தங்கவயலில் தேய்ந்த ரிக்கார்டு மாறுமா?

இந்திரா உணவக கட்டடம் தயார்... அமலுக்கு வருவது எப்போது? தங்கவயலில் தேய்ந்த ரிக்கார்டு மாறுமா?


ADDED : ஜூன் 29, 2024 04:36 AM

Google News

ADDED : ஜூன் 29, 2024 04:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடந்த 2017 ஆகஸ்ட் 16ல் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின்போது, பெங்களூரில் முதன் முறையாக இந்திரா உணவகம் திறக்கப்பட்டது. தற்போது பெங்களூரில் 200க்கும் அதிகமான உணவகங்கள் உள்ளன.

பெங்களூரு மட்டுமின்றி அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பெரும்பாலான நகர பகுதிகளில் இந்திரா உணவகங்கள் அப்போது திறக்கப்பட்டன. ஆட்சி மாற்றத்தால் இந்தத் திட்டத்தில் தொய்வு ஏற்பட்டது.

2023ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த பின், இந்த உணவகங்களை மேம்படுத்த முதல்வர் சித்தராமையா திட்டமிட்டார்.

பெரும்பாலும் ஏழைகள்


இந்த உணவகங்களில் குறைந்த சம்பளம் பெறுவோர், ஏழைகள் தான் பெரும்பாலும் சாப்பிட்டு வருகின்றனர். மாநிலம் முழுவதும் இந்தத் திட்டம் ஏழு ஆண்டுகளாக அமலில் இருந்தாலும், தங்கவயல் நகருக்கு மட்டும் இன்னும் வந்தபாடில்லை.

தங்கவயலில் 3,000 ஆட்டோ ஓட்டுனர்கள், கட்டடத்தொழிலாளர்கள் 10,000 பேர், அமைப்பு சாரா தொழிலாளர்கள் 15 ஆயிரம் பேர், மாணவர்கள் 18 ஆயிரம் பேர், மிக குறைந்த சம்பளத்தில் வேலை பார்ப்போர் 5,000 பேர் உள்ளனர்.

பணிகள் விறுவிறு


இவர்கள் அனைவரும் பசியின்றி இருக்க, மலிவு விலை உணவு தேவைப்படுகிறது. தங்கவயலிலும் இந்திரா உணவகம் அமைக்கப்படுவதாக பல ஆண்டுகளாக தேய்ந்த ரிக்கார்டு போல சொன்னதையே சொல்லி வருகின்றனர்.

ராபர்ட்சன்பேட்டை மகப்பேறு மருத்துவமனை வளாகத்தில், இந்திரா உணவக கட்டடம் கட்டப்பட்டது. லோக்சபா தேர்தல் அறிவிப்புக்கு ஒரு வாரம் முன்னதாக பணிகள் விறுவிறுப்பாக நடந்தன.

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் உணவகம் திறக்கப்படவில்லை. மீண்டும் இத்திட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டனர். மலிவு விலை உணவகம் என்பதால் விரைவில் திறக்க வேண்டும் என்று பலர் விரும்புகின்றனர்.

இந்த உணவகத்துக்கு நகராட்சி பொறுப்பேற்குமா அல்லது மாநில அரசே நடத்துமா? பெங்களூரில் அரசும், மாநகராட்சியும் இணைந்து தான் நிதி ஒதுக்கி செயல்படுத்துகிறது.

அதேபோல உணவகத்தை நிர்வகிக்கும் பொறுப்பை தங்கவயல் நகராட்சி ஏற்குமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

விரைந்து அமல்படுத்துக

தங்கவயலில் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் அதிகமாக உள்ளனர். இந்திரா உணவகத்தில் குறைந்த விலையில், உணவு வழங்குவதால் ஏழைகளுக்கு பெரும் உதவியாக இருக்கும். இத்திட்டத்தை தாமதப்படுத்தாமல் விரைந்து அமல்படுத்த வேண்டும்.

-கருணாகரன்

கட்டடத்தொழிலாளர்

ராபர்ட்சன் பேட்டை 4வது பிளாக்.

தாமதம் ஏன்?

கோலார், சீனிவாசப்பூர், பங்கார்பேட்டையில் இந்திரா உணவகம் பயன்பாட்டில் உள்ளன. ஆனால், தங்கவயலில் இத்திட்டம் இன்னும் அமலுக்கு வரவில்லை. ராபர்ட்சன்பேட்டையில் கட்டடம் தயாராக உள்ளது. மலிவு விலையில், ஏழைகளுக்கு உணவு எப்போது கிடைக்கும்?

நடராஜன்,

தலைவர்,

சிட்டிசன் கேர் சொசைட்டி

ராபர்ட்சன்பேட்டை.

சுரங்கப் பகுதியில் வருமா?

ராபர்ட்சன்பேட்டை பகுதியில் இந்திரா உணவகம் தேவையானது தான். இதை தாமதப்படுத்தக் கூடாது. பெரும்பாலான ஏழைகள் வாழும் சுரங்க குடியிருப்பு பகுதியிலும் அமைத்தால் மேலும் பயனுள்ளதாக இருக்கும். இதை பரிசீலிக்க வேண்டும்.

சவுந்தர்

இ.டி., பிளாக்.

தரமான உணவு

பெங்களூரில் வார்டுக்கு ஒரு இந்திரா உணவகம் உள்ளது. இதை, பல தரப்பட்ட பணியாளர்கள், மாணவர்கள் பயன்படுத்துகின்றனர். தங்கவயலிலும் திறந்து, தரமான, சுகாதார மான, சுவையான, உணவாக வழங்க வேண்டும்.

பழனி,

அம்பேத்கர் நகர்,

ராபர்ட்சன்பேட்டை.

பெண்களுக்கு பயன்

தங்கவயலில் இந்திரா உணவகம் திறந்தால், ஆயத்த ஆடை நிறுவனங்கள், காய்கறிகள், பூ வியாபாரம், கூலித் தொழில் என பல்வேறு வேலைகளில் ஈடுபடும் பெண்களுக்கும் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். எனவே விரைவில் திறக்க வேண்டும்.

சியாமளா,

உரிகம்பேட்டை

சூப்பரான கேள்வி

வசதி படைத்தவர்கள் உள்ள ராபர்ட்சன்பேட்டையில் உணவகம் திறக்க முடிவாகி உள்ளது. சாம்ராஜ்பேட்டை, சூசை பாளையம், லுார்து நகர், 2வது பிளாக், பகுதிகளில் பெரும்பாலும் ஏழைகள் உள்ளனர். இந்திரா உணவகம் செல்ல ஒருவர், 30 ரூபாய் செலவு செய்ய வேண்டும்.

சந்திரா,

ஆண்டர்சன்பேட்டை

கனவு நனவாகுமா?

தமிழகத்தில் மலிவு விலையில் 'அம்மா உணவகம்' போல கர்நாடகாவிலும் 'இந்திரா உணவகம்' திறந்தனர். இந்த திட்டம் தங்கவயலில், இன்னும் அமல்படுத்தவில்லை. இது வெறும் கனவாக இல்லாமல் அமல் படுத்த வேண்டும்.

-கோமளா,

ராபர்ட்சன்பேட்டை

கட்டடம் மட்டும் ரெடி!

அரசு திட்டங்கள் தங்கவயலில் மட்டும் உடனடியாக வருவதில்லை. வீடு இல்லாதோருக்கு வீட்டு மனை வழங்குவதாக மனுக்கள் வாங்கினாங்க. அது என்ன ஆனது? இந்திரா உணவகத்துக்கு கட்டடம் மட்டும் ரெடியாயிருக்கு... எப்போது திறப்பாங்கன்னு தெரியவில்லை.

காஞ்சனா,

ராபர்ட்சன்பேட்டை

- நமது நிருபர்






      Dinamalar
      Follow us