இன்போசிஸ் வரி ஏய்ப்பு : மேலும் நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
இன்போசிஸ் வரி ஏய்ப்பு : மேலும் நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
ADDED : ஆக 01, 2024 08:34 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: ஜி.எஸ்.டி. வரி பாக்கி வைத்துள்ள இன்போசிஸ் நிறுவனத்தை தொடர்ந்து மேலும் பல்வேறு ஐ.டி. நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தன் வாடிக்கையாளர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, தகவல் தொழில்நுட்ப சேவைகளை வழங்க, வெளிநாடுகளில் இன்போசிஸ் கிளைகளை துவங்கி ரூ. 32,000 கோடி வரி ஏய்ப்பு நடந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மத்திய ஜி.எஸ்.டி., புலனாய்வு இயக்குனரகம், 32,000 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி., வரி பாக்கி செலுத்துமாறு இன்போசிஸ்' நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதையடுத்து மேலும் பல்வேறு ஐ.டி. நிறுவனங்கள் ஜி.எஸ்.டி., வரி பாக்கிவைத்துள்ளதாக கூறப்படுகிறது.இந்நிறுவனங்களுக்கு மத்திய ஜி.எஸ்.டி., புலனாய்வு இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.