UPDATED : ஆக 22, 2024 09:33 PM
ADDED : ஆக 22, 2024 09:26 PM

புதுடில்லி: இந்திய செய்தித்தாள் சங்கத்தின் பிரதிநிதிகள் மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடிதம் வழங்கினர்.
ஐ.என்.எஸ். எனப்படும் இந்திய செய்தித்தாள் சங்கத்தின் தலைவர் ராகேஷ் சர்மா தலைமையிலான குழுவினர் நேற்று (21.08.2024) மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை சந்தித்து பேசினர். அப்போது பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை அளித்தனர்.
அதில் செய்திதாளுக்கான 5 சதவீத சுங்க வரியை திரும்ப பெற வேண்டும். டிஜிட்டல் செய்திகள் சந்தாதாரர்கள் மீதான ஜிஎஸ்டி திரும்பப் பெறுதல், தணிக்கை செய்யப்பட்ட சான்றிதழ் சமர்பிப்பதற்கான காலஅவகாசத்தை நீட்டிப்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர்.
அச்சு ஊடகம் மற்றும் வெளியீடு துறையின் நலனுக்காக எங்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.