இண்டர் மீடியேட் தேர்வு முடிவு : தெலங்கானாவில் 7 மாணவர்கள் தற்கொலை
இண்டர் மீடியேட் தேர்வு முடிவு : தெலங்கானாவில் 7 மாணவர்கள் தற்கொலை
ADDED : ஏப் 27, 2024 08:33 PM

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் இண்டர் மீடியேட் தேர்வு முடிவுகள் வெளியான 48 மணி நேரத்தில் 2 மாணவிகள் உட்பட 7 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர்.
தெலங்கானா மாநிலத்தில் இண்டர் மீடியேட் தேர்வு ( பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 ) க்கான முடிவுகள் கடந்த புதன்கிழமை வெளி்யிடப்பட்டன. இதில் தோல்வி அடைந்த மாணவர்கள் 7 பேர் வரையில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில் 2 பேர் மாணவிகளாவர்.
ஹைதராபாத், கம்மம், மஹபூபாபாத் மற்றும் கொல்லூர் ஆகிய பகுதிகளில் இருந்து வழக்குகள் பதிவாகியுள்ளன. தற்கொலை செய்து கொண்ட மாணவர்கள் 16 மற்றும் 17 வயதுடையவர்கள் என்றும் இவர்கள் தூக்கில் தொங்குதல், கிணற்றில் குதித்து, குளத்தில் மூழ்குதல் போன்றவற்றின் மூலம் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
இந்தாண்டு துவக்கத்தில் நடைபெற்ற தேர்தலில் 9.8 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதி உள்ளனர் இவர்களில் 61.06 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இரண்டாம் ஆண்டில் தேர்ச்சி சதவீதம் 69.46 சதவீதமாகும்.
கடந்த 2019 ம் ஆண்டில் இதே போன்று இண்டர் மீடியட் தேர்வில் தோல்வி அடைந்தது தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 22 ஆகும்.
தேசிய குற்ற ஆவணக்காப்பகத்தின் 2022ம் ஆண்டின் படி 28 மாநிலங்களில் தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்கள் எண்ணிக்கையில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ம.பி., மாநிலங்கள் முறையே முதல் மூன்று இடங்களையும் தெலங்கானா மாநிலம் 11 வது இடத்தை பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.

