UPDATED : மே 12, 2024 10:56 AM
ADDED : மே 12, 2024 10:52 AM

புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடியுடன் விவாதம் நடத்த, அழைப்பு விடுத்த ராகுலுக்கு, நீங்கள் என்ன பிரதமர் வேட்பாளரா? என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கேள்வி எழுப்பி உள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன், பிரதமர் மோடி பொது விவாதத்திற்கு தயாரா? என ராகுல் கேள்வி எழுப்பி இருந்தார். இது தொடர்பாக நிருபர்கள் சந்திப்பில், அமேதி தொகுதி பா.ஜ., வேட்பாளரும், மத்திய அமைச்சருமான ஸ்மிருதி இரானி கூறியதாவது: முதலாவதாக, தனது கோட்டையில் இருக்கும் சாதாரண பா.ஜ., தொண்டரை கூட, எதிர்த்துப் போட்டியிடும் தைரியம் இல்லாதவர் ராகுல்.
அவர் பெருமை பேசுவதை நிறுத்த வேண்டும். நான் கேட்க விரும்புகிறேன். ராகுல் என்ன பிரதமர் வேட்பாளரா?. இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் இருந்தாரா?. இவ்வாறு ஸ்மிருதி இரானி கூறினார்.
கடந்த 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி எதிர்த்து போட்டியிட்ட ராகுல் தோல்வி அடைந்தார். இந்தாண்டு, அவர் ஸ்மிருதி இரானியை எதிர்த்து போட்டியிடாமல் , ரேபரேலி தொகுதியில் களமிறங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.