இது இல்லேனா.... அது.. : அடுத்தடுத்து இரண்டு தொகுதிகளில் ஒமர் அப்துல்லா வேட்புமனு
இது இல்லேனா.... அது.. : அடுத்தடுத்து இரண்டு தொகுதிகளில் ஒமர் அப்துல்லா வேட்புமனு
ADDED : செப் 05, 2024 10:27 PM

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் சட்டசபை தேர்தலில் இன்று ( செப்.,5) பட்ஹாம் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஒமர் அப்துல்லா.
90 இடங்களை கொண்ட ஜம்மு-காஷ்மீர் சட்டசபைக்கு செப். 18, செப்.25, அக்.01 ஆகிய மூன்று கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இங்கு பிரதான மாநில கட்சியான பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி, தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது.
இந்நிலையில் கேண்டர்பால் தொகுதியில் தேசிய மாநாட்டு கட்சி சார்பில் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா வேட்புமனு தாக்கல் செய்தார். இன்று ( செப்.,5)பட்ஹாம் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். இதன் மூலம் இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
முன்னதாக நடந்து முடிந்த 2024 பாராளுமன்ற லோக்சபா தேர்தலில், பாராமுல்லா லோக்சபா தொகுதியில், போட்டியிட்டார். வெற்றி பெற்று நிச்சயம் எம்.பி.யாவோம் என நம்பியிருந்த நிலையில், இவரை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்ட , முகமது ரஷீத் என்பவர் பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டிய வழக்கில் கைதாகி சிறையில் இருந்து கொண்டே வெற்றி பெற்றார்.
சுயேட்சையிடம் தோல்வி அடைந்த சோகத்தில் இருந்த ஒமர் அப்துல்லா, இம்முறை நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் ஏதேனும் ஒரு தொகுதியில் நிச்சயம் ஜெயித்தே ஆக வேண்டும் என்ற நிலையில் இரு தொகுதிகளில் வேட்புமனு செய்துள்ளார்.